மாணாக்கர்களின் மேம்பாடு மற்றும் கல்லூரியின் வளர்ச்சிகான ஆலோசனைகள் மற்றும் கல்லூரியின் நிறை குறைகள் குறித்து பெற்றோர் ஆசிரியர்களிடையே கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்தோர்களை பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாசிரியரும் பொருளியல் துறைத் தலைவருமான முனைவர் க. ராமசாமி வரவேற்றார், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க. பொங்கியண்ணன் நன்றி தெரிவித்தார்.
சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் க. ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி முதல்வர் தலைமையுரையாற்றிப் பேசுகையில் தமிழக அரசின் உயர்கல்வித் துறையினால் கல்லூரிக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், புதிய பாடப்பிரிவுகள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், மாணாக்கர்களின் உயரிய பண்புகளை மேம்படுத்துவதில் பெற்றோர்களின் பங்களிப்பு, மாணவிகள் கல்லூரிப் படிப்பு முடிக்கும் முன்பே திருமணம் செய்து வைப்பதை தவிர்த்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்களிடையே விளக்கிப் பேசினார்.

No comments:
Post a Comment