மேலும் மேற்கன்ட மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் சிறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி வட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி பகுதியில் மாநாட்டு ஆலோசனை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பு தி க பவானி ஒன்றிய செயலாளர் திரு.கார்.சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமைதாங்கினார். மாவட்ட தலைவர் திரு.கனேசன் மற்றும் பெருந்துறை ஒன்றிய செயலாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் துவக்க உரையாற்றினார்கள், மாவட்ட செயளாலர் திரு.மகேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளர் புதிக நிறுவனர், மாநில தலைவர் திரு.K.S.ராஜ்கவுண்டர் அவர்கள் மாநாட்டு அழைப்பிதழை வழங்கி சிறப்புரையாற்றினார்கள் மற்றும் கிளை கழக பொறுப்பாளர்கள், தொன்டர்கள், பொதுமக்கள் பலர் சிறப்பாக கலந்து கொண்டார்கள் விழா முடிவில் பெருந்துறை ஒன்றிய செய்தி தொடர்பு பிரிவு செயளாலர் திரு.கைலாசம் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

No comments:
Post a Comment