ஈரோடு மாவட்டம், வேலம்பாளையம் ஊரில் தகுந்த பேருந்து இயக்கம் இல்லாததால் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் இதனால் இன்று அப்பகுதி பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளனர், அம்மனுவை விசாரித்த பொழுது எங்களது பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக கோரோனா (corona) பாதிப்பால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
தற்போது கரோனா (corona) தடை நீக்கப்பட்டு பேருந்து செல்ல அனுமதித்த பின் 1 பேருந்து மட்டுமே இந்த வழியில் இயங்குவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லக்கூட இயலாமல் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் அவசரத்துக்கு மருத்துவமனை செல்லக்கூட முடியவில்லை.
சரியான நேரத்திற்கு பள்ளி , கல்லூரிக்கு, செல்ல முடியாததால் மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் என்று விழுந்து விடுகிறது என்று மாணவர் தரப்பில் கூறப்படுகிறது இதே போன்ற சூழ்நிலை தொடராமல் இருக்க எங்களது பகுதியில் கூடுதல் பேருந்து இயக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தற்போதைய பேருந்து இயக்கம் நேரம்.
5.00am, 8.30am , 11.00am, 3.00pm , 5.00 am , 8.00 am , 11.00 pm.
பேருந்தை இயக்க தேவையான நேரம்.
5.00am, 7.00am, 8.30am, 10.00am, 11.00am, 12.00pm, 1.00pm, 2.30pm, 3.30pm, 5.15pm, 6.15pm, 7.45pm, 9.00pm, 11.00pm போன்ற நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க சொல்லி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர் .


No comments:
Post a Comment