மாநகர மாவட்ட செயலாளர் K.சந்தோஷ்குமார் அனைவரையும் வரவேற்றார் மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் நேதாஜி, மாநகர பொறுப்பாளர்கள் ராஜ் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கண்டன முழக்கம் உரையை மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் அவர்கள் வழங்கினார், மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இக்கோரிக்கை சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம், இந்நிகழ்ச்சிக்கு அனுமதியும் பாதுகாப்பு வழங்கிய சூரம்பட்டி காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் அவர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் கலந்துகொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் ஈரோடு மாநகர மாவட்ட துணை பொறுப்பாளர் PK.ரவி அவர்கள் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment