ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டவர்த்தி அய்யம்பாளையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள தடுப்பணையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.
அந்தக் கோரிக்கையை ஏற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவரும் சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான கே. சி. பி. இளங்கோ பார்வையிட்டார். உடன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுப்புலட்சுமி சுப்பிரமணி மற்றும் கோணமலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேஷ் (எ) செந்தில்நாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் பொறியாளர் சரவணன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிக்கரசம்பாளையம் செல்வராஜ் புதுக்குய்யனூர் சுப்பிரமணியம், சேகர் ஆறுச்சாமி ரமேஷ் அசோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
.jpeg)
No comments:
Post a Comment