அதனைக் கண்ட சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் திருமதி. ஆர். ஜானகி ராமசாமி அவர்களும் தரையில் அமர்ந்து மாற்றுத்திறனாளியின் குறைகளை கேட்டறிந்தார். சத்தியமங்கலம் நகராட்சியில் 22வது வார்டு வசித்து வரும் அந்த மாற்றுத்திறனாளிக்கு குடியிருக்க வீட்டுமனை வேண்டும் எனவும் விண்ணப்பித்திருந்த அதன்பேரில் அவருக்கு ராஜ நகர்ப்பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளி தனது உடல்நிலை காரணமாக அவ்வளவு தொலைவு சென்று வர தனக்கு இயலாது .எனவே சத்தியமங்கலம் நகரப்பகுதியில் அந்த ஒதுக்கீட்டை மாற்றித்தருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் திருமதி. ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் உங்களுக்கு கண்டிப்பாக நான் செய்து கொடுக்கிறேன் என உறுதிமொழி அளித்து. அவரது சாலையோர கடைக்கு அனுமதி ரசீதும் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment