ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடி ஒன்றியம், நஞ்சை கொளாநல்லி பொன் குழலி அம்மன் நகரில் 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் பொது சுகாதாரம் 2023-24க்கான தன்னிறைவு கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளுதலின் அடிப்படையில் மஞ்சுளா வீடு பின்புறம் முதல் கிருஷ்ணன் வீடு வரை மற்றும் கல்யாணராமன் வீடு முதல் ஓ.எச்.டி வரை வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அஇஅதிமுக கொடுமுடி ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி, ஊராட்சி மன்ற தலைவர் பேபி, ஊராட்சி முன்னாள் கழக செயலாளர் செந்தில் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் கமலா மாதவன், வார்டு உறுப்பினர்கள் பத்மா, செல்வி, வெள்ளோட்டம் பரப்பு பேரூர் செயலாளர் மணி, வெள்ளோட்டம்பரப்பு முன்னாள் பேரூர் தலைவர் கதிரழகன், கருங்கரடு கிளைச் செயலாளர் மனோகரன், கருவேலம்பாளையம் குணசேகரன், சிவகிரி தங்கவேல், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி தலைவர் கவின், வார்டு உறுப்பினர் மின்னல் நாகராஜ், செல்வி, கொளாநல்லி ரகுநாதன், கிளாம்பாடி மயில்சாமி, கிளாம்பாடி பேரூர் சுப்பிரமணியம், பாசூர் பேரூர் தண்டபாணி, சென்னசமுத்திரம் பேரூர் காளியப்பன், ஊஞ்சலூர் பேரூர் அருண் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.

No comments:
Post a Comment