ரீடு சமூக சேவை நிறுவனம் சார்பில் சத்தியமங்கலத்தில் ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

ரீடு சமூக சேவை நிறுவனம் சார்பில் சத்தியமங்கலத்தில் ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம்  சுந்தர மஹால் திருமண மண்டபத்தில் ரீடு(READ) சமூக சேவை நிறுவனம் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி.கார்னர் முதல் சுந்தர மஹால் வரை பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணி நடைபெற்றது.

அதன் பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முப்பெரும் விழாவில் ஏழை, எளிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் தலைமை நிறுவனர் ரீடு சமூக சேவை நிறுவனம் திரு. கருப்புசாமி. நலத்திட்ட  உதவிகள் வழங்கிய சிறப்பு அழைப்பார்கள் ஈரோடு திமுக மாவட்டசெயலாளர் திரு.என்.நல்லசிவம், சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும்,  சத்தி நகர திமுகபொறுப்பாளர் திருமதி. ஆர்.ஜானகி ராமசாமி, திமுக ஈரோடு மாவட்டதுணை செயலாளரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி.கீதாநடராஜன், கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவரும் கோபி திமுக நகர செயலாளர் திரு. நாகராஜ் மற்றும்  கட்சிகளின் தலைவர்களும்,சமூக ஆர்வலர்களும், பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.


திரு.ஆனைக்கொம்பு ஸ்ரீராம் ஈரோடு வடக்கு மாவட்ட துணை தலைவர் - இந்திய தேசிய காங்கிரஸ், திரு.திருத்தணிகாச்சலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரு.பொன்.தம்பிராஜன் - பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திரு.பொன்னுசாமி-மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் பேரவை, திரு.அப்துல்லா- மண்டல நிதி செயலாளர், தமிழ் புலிகள் கட்சி, திரு.குணசேகரன் ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் திராவிட முன்னேற்றக் கழகம், திரு.மூர்த்தி சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். 

No comments:

Post a Comment