இந்திய இரானுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின்மூலம் அதிக அளவு இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது மத்திய அரசு. இந்த திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள் வலுவான எதிர்ப்புகளை தெரிவித்துவரும் இவ்வேளையில், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் பல வகையில் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த திட்டத்தை உடனே திரும்பப்பெற கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் இன்று மாலை, CPIM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாலுக்கா செயலாளர் திரு.முத்து பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.பரமசிவம், இடைக்கமிட்டி உறுப்பினர் திரு.ரவி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
மேலும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் திரு.விஸ்வநாதன், பாலசுப்பிரமனி, கெளரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிக்கோயில் கிளை செயலாளர் திரு.ராஜசேகர் நன்றி கூறினார். மேலும் திரு.ரமேஷ் , வி.தொ.ச. திரு.கருப்பன் திரு.ஜெகநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள், வாலிபர் சங்க உறுப்பினர்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment