சென்னிமலையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் கைது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 June 2022

சென்னிமலையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் கைது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, ஈங்கூர் ரோட்டில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சதாசிவம் சமையல் எரிவாயு நிறுவனம் நடத்தி வருகிறார். 


இவரது கட்டிடத்தின் மேல் தளத்தில் ரவிச்சந்திரன் என்பவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 6-ந் தேதி இரவு மர்ம நபர்கள் 3 பேர் முகமூடி அணிந்தபடி எரிவாயு நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணத்தை திருடி விட்டனர்.  அதேபோல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணத்தையும் திருடினார்கள். 


இரு அலுவலகங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னிமலை போலீசார் சென்னிமலை - ஈங்கூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். 


அப்போது அவர்கள் முன்னுக்கு பிறனாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் எரிவாயு அலுவலகம் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் புகுந்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். 


மேலும் அவர்களை பற்றி விசாரித்த போது அவர்கள் அனோவர் உசேன்(22), சைக்குள் இஸ்லாம்(32) மற்றும் மன்சூர் அலி(22) என தெரியவந்தது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் 3 பேரும் சென்னிமலை அருகே எம்.பி.என்.காலனியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. 


போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment