ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு தமிழ்நாடு அரசால் திறந்தவெளி மலம் கழிப்பில்லா நகராட்சி என தேர்ந்தெடுக்கப்பட்டு நற்சான்றிதழ் பெற்றதற்காக துப்புரவு அலுவலர் சக்திவேல் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நகராட்சி தலைவர் திருமதி.ஆர்.ஜானகிராமசாமி அவர்கள் வாழ்த்துக்களை கூறினார்.
நகராட்சி ஊழியர்களை வழி நடத்திச் சென்ற சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு. எம்.சரவணக்குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி பொறியாளர் ரவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment