மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளும் 470 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்தப் போட்டியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, கோபிநாத், துவக்கி வைத்தனர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினரான சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திருமலைசாமி பரிசு வழங்கி சிறப்பித்தார். போட்டிக்கான ஏற்பாடுகள் சிவகிரி விவேகானந்தா யோகா அகாடமி மற்றும் திரு. வி. கல்யாணசுந்தரனார் கல்வி அறக்கட்டளை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் யோகா ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவில் 9 முதல் 12 வயதுக்குட்பட்ட யோகா போட்டியில் T. காவியா முதல் பரிசும், 13 முதல் 15 வயதிற்கு உட்பட்ட யோகா போட்டியில் பி ஜனனி மூன்றாவது பரிசும், எஸ் சந்தோஷ் குமார்சிறப்பு பரிசாக . சந்தோஷ் குமார்ரும் பெற்றனர். மற்றும் இவ்விழாவில் கஸ்தூரிபா கிராம உயர்நிலைப் பள்ளியின் சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வசந்தி ஆசிரியைக்கும் சவிதா யோகா ஆசிரியைக்கும் வழங்கப்பட்டது. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு ம் ஆசிரியர்களுக்கும் பள்ளியின் செயலர் U.R.C. தேவராஜன் தலைமை ஆசிரியை என்.எம் .சாந்தி ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment