ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலுள்ள 39-வது வார்டு ராஜாஜி புரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட மாண்புமிகு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு.சு. முத்துசாமி அவர்களும், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு.அ. கணேசமூர்த்தி அவர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ. திருமகன் ஈவெரா. ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ஹச் கிருஷ்ணுண்ணி.இ.ஆ.ப முன்னிலை வகித்தார் மேலும் விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி எஸ். நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் மற்றும் திமுக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment