ஈரோடு மாநகரில் அரசியல் சாசனத்தின் வழியே கல்வியும் ஜனநாயகமும் கருத்தரங்கம் நூல்வெளியீட்டு விழாவில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி அவர்களும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான E.திருமகன் ஈவெரா MLA., அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி நூலின் முதல் பிரதியை வெளியிட்டார்கள்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் திரு. ச.விஜயமனோகரன் அவர்கள் தலைமை தாங்கினார் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் திரு.செ.நவீன் குமார் அவர்கள் வரவேற்புரை யாற்றினார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் திரு. பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் திரு. ஆர்.மணி, இடைநிலை ஆசிரியர் சங்க செயலாளர் திரு. பி.வி.ராமசாமி,தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் திரு. ஆ.இளங்கோவன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் திரு. இல.விசயேந்திரன் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் திரு.எம்.சசி அவர்கள் நன்றிரையாற்றினார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
.jpeg)
No comments:
Post a Comment