புஞ்சை புளியம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் பெயரில் நிலதான பத்திரம் பதிவு செய்யப் பட்டது. சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து நிலம் வழங்கியதற்கான தான பத்திரம் வழங்கப் பட்டதை தொடர்ந்து கண்ணம்மாள், தெய்வசிகாமணி, ரேவதி ஆகியோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி தலைவர் ஜனார்த்தனள், துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், கமிஷனர் சக்திவேல் ஆகி யோரிடம் நிலம் தானம் செய்ததற்கான பத்திரத்தை ஒப்படைத்தனர்.
பத்திரத்தை பெற்நுக் கொண்ட நகராட்சி துணைத் தலைவர் சிதம்பரம், மக்கள் பயன்பாட் டுக்கு குடிநீர் தொட்டி கட்ட தங்களது நிலத்தை, தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு பொன்னாடை அணி வித்து கவுரவித்தார். இந்நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் கதிர்வேல் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162481

No comments:
Post a Comment