விதவை/ கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற பெண் களுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

விதவை/ கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற பெண் களுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள்.


ஈரோடு மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 2021 - 2022 - ம் ஆண்டு ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவை/ கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற பெண் பயனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவேவாராக உருவாக்கும் திட்டத்தின் கீழ்  பயன் பெறும் பயனாளிகளை நம்பியூர் ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப செந்தில்குமார் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


மாண்புமிகு.தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை மேன்மையடைய இந்த திட்டம் மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் மகத்தான மாபெரும் திட்டங்கள் வரவிருக்கின்றது என்பதையும் தெரிவித்தார். ஆடுகள் வளர்ப்பு குறித்து கால்நடை மருத்துவர்களிடம் பயனாளிகளுக்கு எடுத்துரைக்கும் படி கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக பொருளாளர் என்.சி. சண்முகம் அவர்கள், ஒன்றிய கழக துணை செயலாளர் மைக்.பழனிச்சாமி அவர்கள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் RPS பழனிச்சாமி அவர்கள், நம்பியூர் பாபு(எ) உதயகுமார் அவர்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை பணியாளர்கள், பயனாளிகள் ஆகியோர் உடனிருந்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471.

No comments:

Post a Comment