ஈரோடு மாவட்டம், தாளவாடிக்கு அரசு முறை பயணமாக செல்லும் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திற்கு சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் முன்னிலையில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும் சத்தி நகர திமுக பொறுப்பாளர் ஆர். ஜானகி ராமசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரங்கசாமி, சத்தியமங்கலம் நகராட்சி துணை தலைவர் ஆர். நடராஜ், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே. சி. பி. இளங்கோ, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஐ. ஏ. தேவராஜ், அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர் ஏ. எஸ். செந்தில்நாதன், பாளையம் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:
Post a Comment