ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம். பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில் 120 வது காமராஜர் பிறந்தநாள் விழா கொடுமுடி வட்டம், சிவகிரி புதிய பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் காமராஜர் உருவப்படத்திற்கு மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
உடன் பனங்காட்டு மக்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் ஜீவா, இளைஞரணி பொறுப்பாளர் ரமேஷ், மாவட்ட துணை பொறுப்பாளர் குமார், மொடக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் சந்தோஷ் நாடார், தினேஷ், லோகநாதன், சேகர் சங்கர், மோகன் குமார், தமிழ், அப்புகுட்டி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment