ரீடு இயக்குநர் இர. கருப்புசாமி தலைமையுரை ஆற்றவும், மருத்துவர் க. சற்குணா மற்றும் வழக்குரைஞர் பழ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கவும், விதைகள் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் மா. மாரிமுத்து வரவேற்புரை நிகழ்த்திட "நானும் எழுத்தும்" என்கிற தலைப்பில் எழுத்தாளர் வா.மு. கோபு பேசியது அவரது கதைகளைப் போல உரையாடலும் இயல்பாக அமைந்தது, புத்தகம் என்பது பொழுதைப் போக்காமல், சமூக மாற்றத்திற்கானதாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட புத்தகங்கள் தான் பேராயுதம் என்று "புத்தகம் எனும் பேராயுதம்" என்கிற தலைப்பில் சிறப்பானதொரு கருத்துரை வழங்கினார் எழுத்தாளர், வழக்கறிஞர் இரா. முருகவேள், எழுத்தாளர் வா.மு.கோமு மற்றும் இரா.முருகவேள் அவர்களுக்கு முறையே நினைவுப் பரிசை விதைகள் வாசகர் வட்ட பொருளாளர் இரா. வினோத் மற்றும் செயற்குழு உறுப்பினர் மா. மாரிமுத்து வழங்கி சிறப்பித்தனர்.
நிறைவாக விதைகள் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் நரேஷ்குமார் மணி நன்றியுரை கூற ஆறாம் நாள் விழா இனிதே நிறைவுற்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:
Post a Comment