இந்நிகழ்ச்சியில் குன்னத்தூரில் உள்ள பெருந்தலைவர் திருவுருவச்சிலைக்கு நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் தனது ஆதரவளர்களுடன் வாகணப் பேரணியாக அணிவகுத்து சென்று மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து நம்பியூர் பேருந்து நிலையம், தெற்குப்பதி மற்றும் எலத்தூர் ஆகிய இடங்களில் காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
எலத்தூர் பேரூராட்சியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர் எதிர்த்து போரிட்டு சங்ககிரி கோட்டையிலே தூக்கு கயிறை முத்தமிட்டு வீர மரணம் அடைந்த மாவீரன் கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடாருக்கு மணிமண்டபம் அமைத்து அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்,நம்பியூர் ரவுன்டனாவில் காமராஜர் சிலை நிறுவுதல், கோபி செட்டிபாளையம் மேற்கு நுழைவுவாயில் ஆர்ச்சுக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும், மேலும்மீன்பிடி இல்லா காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை போல் பனைத்தொழிலாளர்களுக்கு பனை வேலை இல்லாக் காலங்களில் அரசு உதவித தொகை வழங்க வேண்டும், அரசு கூட்டுறவு அங்காடியில் பனைமரத்தில்கிடைக்கும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியபனைப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாநிலச் செயலாளர் ராஜேஷ் நாடார், மாநில பொருளாளர் கவின்சங்கர் நாடார், மாநிலத் துணைத் தலைவர் வெள்ளிங்கிரி பண்ணையார், மாநிலத் துணைச் செயலாளர் அய்யாசாமி நாடார் நாடார்,தலைமை நிலைய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மாநில நிர்வாகிகள் சம்பத் நாடார் ,விக்னேஷ் நாடார், சிவக்குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் எலத்தூர் பேரூராட்சி நாடார் இளஞ்சிங்கள் செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து நாடார் இனமக்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 99651 62471.

No comments:
Post a Comment