18 பேர் படு கொலைக்கு நியாயம் கேட்டு திராவிடர் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 July 2022

18 பேர் படு கொலைக்கு நியாயம் கேட்டு திராவிடர் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 18 பேர் படு கொலைக்கு நியாயம் கேட்டு திராவிடர் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


ஈரோடு காளை மாடு சிலை அருகே திராவிடர் தமிழர் கட்சியினர்  அருந்ததியர் சமுதாய மக்கள் 18 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு திராவிடர் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அக்கட்சியின் தெற்கு மாவட்ட  செயலாளர்  சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் 18 அருந்ததியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், அருந்ததியர் மக்கள் கொலை செய்ய ப்படும்போது கொலையாளிகளை எஸ்சிஎஸ்சி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரியும், கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் செல்வம் துணை பொதுச்செயலாளர் முருகேசன் உள்ளிட்ட கட்சியினர் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment