சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 217 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வருகிற ஆடி 1 (17 -7 -2022) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நல்ல மங்காபாளையத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டி மாண்புமிகு சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தனை நாமக்கல்லில் அவரது இல்லத்தில் மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். மேலும் மாண்புமிகு அமைச்சர் மதிவேந்தனின் தந்தையும் திமுக பொதுக்குழு உறுப்பினர் சாந்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் இரா. மாயவனை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் வி எஸ் சண்முகம் மாவட்ட தலைவர் ஆர் கண்ணையன் தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471
No comments:
Post a Comment