ஈரோடு மாவட்டம், தூ. நா. பாளையம், புள்ளப்ப நாயக்கன் பாளையம் ஊராட்சியில் 25லட்சம் மதிப்பிலான வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை ஈரோடு திமுக மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தொடங்கி வைத்தார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியன், தூ.நா.பாளையம் திமுக ஒன்றி பொறுப்பாளர் எம்.சிவபாலன் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி கந்தசாமி , புள்ளப்ப நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் , கிளைக் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment