பவானி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

பவானி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட் சிக்குட்பட்ட பவானி. ஆற்றுப் பாலம் அருகே ஆற்றின் கரையோரம் தனி யார் நிர்வாகம் சார்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட் டது. 


ஆற்றங்கரை ஓரத்தில் காம்பவுண்ட் சுவர் கட் டப்பட்ட இடம் தகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமானது என வருவாய்த்துறை ஆவனங்களில் தெரிய வந்ததை அடுத்து சத்தியமங் கலம் நகராட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமித்து காம்பவுண்ட்சுவர் கட்டிய தனியார் நிர்வாகத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்றும்மாறு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, கடந்த மூன்று தினங் களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 


இதைத்தொடர்ந்து நேற்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற நகராட்சி அதிகா ரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்துக் கட் டப்பட்ட காம்பவுண்ட் சுவரை பொக்லைன் இயந் திரத்தை பயன்படுத்தி இடித்து தள்ளினர். 


அப்போது சம்பவ இடத்திற்கு வந்த தனியார் நிர்வாகத்தினர் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்தனர். இதை யடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடை பெற்றது. 


நகராட்சி ஆணையாளர் சரவணகுமார், சத்தியமங்கலம் நக ராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம்   காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன்   ஆகியோர் பங்கேற்று -ஆவணத்தின் உண்மைத் தன் மையை கண்டறிந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment