திமுக சார்பில் தொடங்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் இனிதே நிறைவடைந்தது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 July 2022

திமுக சார்பில் தொடங்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் இனிதே நிறைவடைந்தது.

ஈரோடு மாவட்டம், புன்செய்ப் புளியம்பட்டி நகர திமுக சார்பில் தொடங்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் இனிதே நிறைவடைந்தது.


நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர்  பி.ஏ.சிதம்பரம்  ஏற்பாட்டில் பிரபல பயிற்சி நிறுவனமான சென்னை வராண்டா ரேஸ் பயிற்சியில், எஸ்.ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் கடந்த மே மாதம் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்  நிறைவடைந்தது.

111 போட்டித் தேர்வாளர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. மொத்தம்: 10 வாரங்கள் (பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை) 11 தேர்வுகள், 6000 வினாக்கள் அடங்கிய  வினாத்தாள் தொகுப்புகள் 10 வாரம் வகுப்பில் பங்கேற்ற போட்டி தேர்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.


நகர செயலாளர், நகர்மன்ற துணை தலைவர்  பி.ஏ.சிதம்பரம்  பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போட்டி தேர்வாளர்களை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இனிவரும் காலங்களில் இதுபோல் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி வகுப்புகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471 

No comments:

Post a Comment