சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான கே.சி.பி.இளங்கோ பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயானத்துக்கு இடம் தேர்வு செய்ய பார்வையிட்டார் மற்றும் பாரதியார் நகர் முதல் வீதியில் 15 ஆவது நிதி குழு மானியம் கிராம ஊராட்சி நிதி 7 லட்சம் மதிப்பில் வடிகால், காங்கிரட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
உடன் வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம், கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேஷ்(எ) செந்தில்நாதன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், சந்தோஷ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471.

No comments:
Post a Comment