அனைவருக்கும் சிறந்த கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, சிறந்த மருத்துவம் மேலும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் ஆகிய கோரிக்கைககளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர் உத்திரசாமி வரவேற்புரையாற்றினார், மாவட்ட தலைவர் கலைவானி விஜயகுமார் தலைமை தாங்கினார், செல்வம் வித்யாரமேஷ், தினேஷ், சரவணன் சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். செல்வக்குமார் மலர்க்கொடி பழனிசாமி மோகன்குமார் சித்தி விநாயகன் அஜித்குமார் ஆகியோர் தி மு க அரசை கன்டித்து சிறப்புரையாற்றினர். நகரத்தலைவர் நந்தகுமார் நன்றிகூறினார், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொன்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment