ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம், சார்பில் கொடுமுடி சாலைப் புதூர் அருகே ஆவுடையார்பாறையில் நடந்த கண்டன பிரச்சார நடைபயணத்தில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான விஷக் கழிவுகளை வாழ்வாதாரமான காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து விட்டு சீரழிக்கும் நோக்கில் செயல்படும் தோல் மற்றும் சாயப்பட்டறை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசை கண்டித்து விழிப்புணர்வு நடைபயணம் இரண்டு நாட்களில் முதல் நாள் இன்று நடைபெற்றது.
இதில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.மாநில விவசாய அணியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் அக்கட்சியின் விவசாய அணி, தொழிலாளர் அணி ,மகளிர் அணி, இளைஞரணி ,மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம். தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

No comments:
Post a Comment