ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் கருமுட்டை மோசடி வலைப்பின்னலில் சிக்கிக்கொண்ட சிறுமியின் தற்கொலை முயற்சியை தொடர்ந்து அச்சிறுமிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் மேலும் இதற்குப் பின்னணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார், பொதுச் செயலாளர்கள் சிவகாமி மகேஸ்வரன், செந்தில், வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் சுதர்சன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்திரம், ஈரோடு மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம் ஐயப்பன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைதலைவர் அக்னி ராஜேஷ், முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், மற்றும் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை உட்பட ஏராளமான பல்வேறு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment