காங்கிரஸ் கட்சி சார்பாக ஜம்பையில் காமராஜர் பிறந்த நாள் விழா ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஜம்பை கடைவீதி முக்கிய சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு இன்று, மாலை அனிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், அன்னதானம் செய்தும் சிறப்புசெய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிட்டு(எ)இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார் தங்கவேல் வரவேற்றார், மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்டாரத்ததலைவர் பூபதி மற்றும் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ வெ ரா கலந்துகொண்டு சிலைக்கு மாலை அனிவித்தார்கள். மேலும் கட்சி நிர்வாகிகள் தொன்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment