ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் கே. ஆர். கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி. கே. செல்வகுமார் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினரும் ஈரோடு வடக்கு மாவட்ட பார்வையாளருமான என்.பி பழனிச்சாமி, கலந்து கொண்டார்கள்.
நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி. ஜி. மோகன் குமார், சித்தி விநாயகம், மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ. என். உத்தரசாமி, சரவணன், சரவணகுமார், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநில, மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள், மண்டல் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:
Post a Comment