சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 July 2022

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி  வனச்சரகத்திற்க்கு உட்பட்ட தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மல்லப்பா (70) இவருக்கு தர்மாபுரம் பகுதியில்  விவசாய தோட்டம் உள்ளது. இதில் வாழை சாகுபடி  செய்துள்ளார். 


இந்நிலையில் நேற்று  இரவு 2.00 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாழை  தோட்டத்தில் புகுந்து நாசம் செய்துள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது. அப்போது காவலுக்கு இருந்த  விவசாயி மால்லப்பாவை  யானை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்ததில், சம்பவ இடத்திலயே விவசாயி மல்லப்பா துடிதுடித்து உயிரிழந்தார். 

இற்று காலை அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது தான் மல்லப்பா வாழை தோட்டத்திற்குள் இறந்து கிடப்பது தெரிய வந்தது. வனத்துறையினருக்கு இன்று காலை தகவல் அளித்தும், சம்பவயிடத்திக்கு வனத்துறை அதிகாரிகள்  யாரும் வராததால் அப்பகுதி மக்கள் கடும் கோபம் அடைந்தனர்.  


கடந்த ஒருமாதமாக இந்த பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், தாளவாடி வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சடலத்தை எடுக்க விடாமல் வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யானை மிதித்து விவசாயி  பலியான சம்பவம் மலைகிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment