ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி, சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட தோப்பூர் காலனி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தோப்பூர் காலனி பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்யும் சத்தியமங்கலம் நகராட்சியின் தடையில்லா சான்று பெறுவதற்கு பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அ. பண்ணாரி தலைமையில் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் எம்.சரவணகுமாரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
உடனடியாக அக்கோரிக்கை ஏற்றுக்கொண்டு விரைவில் தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் எம். சரவணக்குமார் உறுதி அளித்தார்கள்.உடன்அ இ அ தி மு க. மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.வெங்கிடுசாமி, சத்தியமங்கலம் அ.இ.அ தி மு க.நகர செயலாளர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஒ.எம்.சுப்ரமணியம், முன்னாள் நகர செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வி.கிருஷ்ணராஜ், சத்தியமங்கலம் நகர்மன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, தனபாக்கியம் செல்வம், லட்சுமணன், புவனேஸ்வரி குமார் மற்றும் நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment