ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பீர்கடவு ஊராட்சியில் தொடர்ந்து 10 நாட்களாக சிறுத்தை புலியானது ஆடு மாடு, நாய்களை கடித்து கொன்று வேட்டையாடி வருகிறது.
நேற்று இரவு புதுப்பீர்கடவு தவமணி தோட்டத்தில் நாய் ஒன்றை கடித்துக் கொன்றது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் K.C.P. இளங்கோ பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட வன அலுவலரிடம் பேசி சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவித்தார்.
மாவட்ட வன அலுவலர் இரண்டு நாட்களில் கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.உடன் புதுப்பீர்கடவு ஊராட்சி மன்ற தலைவர் முருகன்,ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா செல்வன், இக்கரை நெகமம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் செல்வன், மதன்குமார், பண்ணாரி, சுப்புராஜ், தங்கவேல், நாகராஜ்,ரவி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment