ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையம் 24 வார்டு ஓங்காளியம்மன் பகுதி மற்றும் வீரப்பன்சத்திரம் அசோகபுரம் பகுதியில் நேற்று (06/07/2022) மாலை 07மணி அளவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாள் மற்றும் கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முனைவர் பொன்னேரி சிவா அவர்கள் சிறப்புரையாற்றினார், ஈரோடு மாவட்ட மேயர் நாகரத்தினம் , மாநகர செயலாளர் சுப்பிரமணி ,மாவட்ட பொறுப்பாளரும் 1வது மண்டல குழு தலைவர் ப.க.பழனிச்சாமி, வட்ட செயலாளர்கள் சரவணன் , மோகனசுந்தரம் , நாகராஜ், சதீஷ்.மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment