ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் எண்ணமங்களம் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறானாளிகள் சிறப்பு முகாம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறானிகள் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறானிகள் பரிசோதனை செய்து அவர்களுக்கு உண்டான சிகிச்சை மற்றும் தேவையான உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது இவர்களை பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவர்கள் சதீஸ்குமார், கவிதா மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் எண்ணமங்களம் ஊராட்சி மன்றத் தலைவர் மயில் கந்தசாமி,துணைத்தலைவர் சங்கீதா பாலாகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலர் தாமரை செல்விமகேந்திரன் திமுக ஒன்றிய நிர்வாகி மாணிக்கம் மற்றும் மாவட்டம், ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்திகளுடன் ஈரோடு மாவட்ட நிருபர் நரசிம்ம மூர்த்தி செல் 9789734920.

No comments:
Post a Comment