ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கவுந்தப்பாடியில் பிளாஷ்டிக் ஒழிப்பில் துரிதமாக இயங்கும் கவுந்தப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு பாவா கே. பி. தங்கமணி அவர்களுக்கு பவானி ஒன்றிய மதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சோ.வீரக்குமாரன், இளைஞரணி அமைப்பாளர் க.சு. அண்ணாதுரை, ஒன்றிய துணை செயலாளர் கே. எம். செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி இரா.ஜெயமணி, இலக்கிய அணி அமைப்பாளர் லோகு, குமரேசன், கவுந்தப்பாடி ஊராட்சி செயலாளர் கு. செல்வம் , மற்றும் தோழர்கள் அனைவரும் கதர் துண்டு அணிவித்து வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்தார்கள்.
மேலும் தொடர்ந்து பிளாஷ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தவும், நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளை அப்புறப்படுத்திடவும், கவுந்தப்பாடி ஊராட்சி பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அழித்து நீர்வளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment