ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்றி ஊராட்சியில் அணில் நத்தம் கிராமம் பெரியகுன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முயற்சியால் இங்கு JIO TOWER அமைக்கப்பட்டது. இன்று 9/07/2022 ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி இ. ஆ. ப. திறப்பு விழா செய்தார்.
உடன் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமானகே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஐ. ஏ. தேவராஜ், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் சிக்கரசம் பாளையம் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் குய்யனூர் சுப்ரமணியம்,கடம்பூர் ராமசாமி,குன்றி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் மாதேஷ், முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நவ்ஷாத்,சதீஷ், சடையப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment