ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ணாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழைய இரும்பு வியாபாரி வெங்கடேஷ் இவர் நேற்று முன்தினம் இரவு சென்றபோது போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார் ஏற்கனவே அவரைப் பற்றி தெரிந்தவர் என்று மது அருந்த பணம் தரமுடியாது என வெங்கடேஷ் கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடேசை அந்த நபர் தாக்கியதாக கூறப்படுகிறது அவர் தாக்கியதில் காதில் ரத்தம் வழிய வீட்டுக்கு சென்றுள்ளார் .. அவரைப் பின் தொடர்ந்து சென்ற அந்த நபர் வெங்கடேஷையும் அவரது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் காரணமாக வெங்கடேஷ் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது அவரது சடலத்தை மீட்ட கருங்கல்பாளையம் போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்
இதனால் வெங்கடேஷ் உயிரிழப்பதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் ... சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


No comments:
Post a Comment