ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்றத்துக்கு உட்பட்ட கவுந்தப்பாடி ஊராட்சியில் தென்காட்டுபாளையம் காலனியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், பவானி சட்டமன்ற உறுப்பினருமான K.C.கருப்பணன் MLA அவர்கள், இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கினங்க இப்பகுதியில் வடிகால் வசதி அமைக்க திட்டமிட்டு, ஆய்வுசெய்து இப்பணிக்காக இன்று அடிக்கல் நாட்டினார்கள்.
உடன் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி அவர்கள், பவானி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகதீசன் அவர்கள், வார்டு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி மற்றும் விநாயகம், சிவகாமி சரவணன் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட & ஒன்றிய சார்பு அமைப்புச் செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment