ஈரோடு மாவட்டம் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அரசு சிறப்பு குறைதீர்க்கும் மனுக்கள் வாங்கும் முகாம் நடைபெற்றது.
இன்று புதன்கிழமை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரும் மற்றும் மாண்புமிகு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் ஆலோசனைப்படி இந்த சிறப்பு மக்கள் குறைதீர் மனுக்கள் முகாம் நடைபெற்றது, இம்முகாமில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் அவர்களுடைய மனுக்களை முகாமில் சமர்ப்பித்தனர்.
இம்முகாமில் 1வது மண்டல தலைவர் மரியாதைக்குரிய பா.க. பழனிசாமி அவர்கள் தலைமையில் டவுன் வி. எ. ஒ . சதீஷ் மனுக்கள் பெற்றனர் மற்றும் கழக நிர்வாகிகளாக அன்பழகன் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ,24 வது வட்ட திமுக செயலாளர் எ.மோகனசுந்தரம், 26வது வட்ட செயலாளர் சங்கமேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் சரண்யா, ஏ.சி.கோவிந்தராஜ், எஸ். கே.பழனிசாமி, பூபதி ,கவிவாணன், பாலமுருகன், சின்ராஜ், சுரேஷ், வீரன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச. சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி. சிலம்பரசன்.


No comments:
Post a Comment