தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாள ருமான சு.முத்துசாமி அவர்களின் அறிக்கையின்படி தி.மு.க.15 - வது பொது தேர்தலையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் பதவிக்கு V.C.நடராஜன் வேட்பு மனுவை முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை திமுக தெற்கு மாவட்ட தேர்தல் ஆணையாளர் இளங்கோவன் அவர்களின் தலைமையில் மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலையில் ஈரோடு மணல் மேட்டில் உள்ள தெற்குமாவட்ட தி.மு.க அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக மனு தாக்கல் செய்த வி.சி. நடராஜன் அவர்களுக்கு பகுதி வார்டு செயலாளர்கள், கழக பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் சக்திவேல் உடன் ஒளிப்பதிவாளர் சிலம்பரசன்.


No comments:
Post a Comment