இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடவேண்டும். வல்வில் ஓரி மன்னருக்கு ஈரோட்டில் மணிமண்டபத்துடன் சிலை அமைக்க வேண்டும். கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்க்ரீட் தளம் திட்டம் கைவிடப்பட வேண்டும்.
ஆக.7, மதுரை சமூகநீதி மாநாடு திரலாக கலந்துகொண்டு மாநாடு வெற்றிபெற செய்யவேண்டும். என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக மாவட்டசெயலாளர் பூபதி வரவேற்றார். மாநில துனைத்தலைவர் பூலுவராஜன், மாநில பொதுசெயலாளர் வேலுசாமி கவுண்டர், செங்கோடகவுண்டர், சஞ்சீவ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கினைப்பாளர் கேசவமூர்த்தி, மாநில துனைபொது செயலாளர் சோனா ஆறுமுகம், மாநில இனை ஒருங்கினைப்பாளர் சண்முகசுந்தரம், கொங்கு மண்டல இளைஞர் அனி செயலாளர் சந்தனக்காடு சுரேஷ், மாவட்ட பொருளாளர் சுரேஷ், நாமக்கல் மாவட்ட பொருளாளர் மணி, ஈரோடு மாவட்ட தலைவர் வெல்கம் முருகேஷ், மாநில இளைஞர் அனி செயலாளர் கவுந்தி மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
திரைப்பட இயக்குநர் செந்தமிழ் தேனி, திருப்பூர் மாவட்ட செயலாளர் மருதாச்சலம், சீர்மரபினர் நலச்சங்கம் செயல் தலைவர் இளங்கோ, சீர்மரபினர் நலச்சங்கம் உயர்நிலை குழு உறுப்பினர் மதுரை தவமனிதேவி, மதுரை சீர்மரபினர் நலச்சங்கம் மாவட்ட மகளிர் அனி மலர்க்கொடி, திண்டுக்கல் மாவட்ட சீர்மரபினர் மகளிர் அனி வசந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிறைவாக கொங்கு மண்டல ஒருங்கினைப்பாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.மேலும் ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் , கோவை, சேலம், ஆகிய பகுதிகளிலிருந்து மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment