ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளருக்கு கோவை சங்கரா கண் மருத்துவமனை அறக்கட்டளை மூலமாக இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் கொமாராபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் எஸ். எம். சரவணன் கலந்துகொண்டு கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, ஊராட்சி செயலாளர் குமார், மற்றும் சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்,முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment