தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல்ராமன் சந்திப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 July 2022

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல்ராமன் சந்திப்பு.

சென்னையில் 7- 7- 2022 அன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர்  மு. க. ஸ்டாலினை  மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன்  நேரில் சந்தித்து சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் வரலாற்று புத்தகத்தை வழங்கினார்.... மேலும் மாவீரன் பொல்லான் 217 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அழைப்பிதழ் வழங்கினார். அப்போது  தமிழக முதல்வரிடம்  மாவீரன் பொல்லான் மணிமண்டபம் அமைக்க ஒரு கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கும்...,, ஈரோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி அளித்து அதனை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.


தமிழக முதல்வர்  மாவீரன் பொல்லான் மணிமண்டப பணிகள் விரைவில் தொடங்கப்படும்  என உறுதி அளித்தார். மேலும் அருந்ததியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 3% தனி இட ஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அருந்ததியர்கள் உட்பிரிவில் உள்ள சக்கிலியர், மாதாரி, பகடை, மாதிகா, தோட்டி, செம்மாண், ஆதி ஆந்திரா, ஆகிய உட் பிரிவுகனை ஒருங்கிணைத்து அருந்ததியர் என அரசாணை வெளியிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்..... சிவகங்கையில் வீரத்தாய் குயிலிக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment