ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் ஒன்றியத்தில் அறுபது ஆண்டு கனவு நனவு ஆன நாள் அந்தியூரில் புதிதாக தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பான முறையில் கல்லூரி திறப்பு விழா அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஸ்வரன், கல்லூரியின் மண்டல இயக்குநர், கல்லூரி முதல்வர், ஈரோடு மாவட்ட சேர்மேன் நவமணி கந்தசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பானுமதி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வளவன் ஆசிரியர் ஆசிரியை மாணவ மாணவிகள் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி,கிளைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment