ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிப்புதூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களை ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர், தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர், ஜன நாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன், துணைத் தலைவர் ரமேஷ், பள்ளி தலைமையாசிரியர் குழந்தைசாமி, வார்டு உறுப்பினர் சுரேஷ், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471
No comments:
Post a Comment