கடம்பூர் பகுதி கிராம மக்கள் 300 பேருடன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 August 2022

கடம்பூர் பகுதி கிராம மக்கள் 300 பேருடன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம், தோப்பூர் காலனி, ராஜன் நகர், பட்டவர்த்தய்யம் பாளையம், கடம்பூர் பகுதியைச் சார்ந்த ஏழை எளிய கிராம மக்கள் 300 பேருடன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி தலைமையில் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர்ஷினியிடம் மனு அளித்தார். 


விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வருவாய் கோட்டாட்சியர்  உறுதியளித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரபாகரன் , மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் எஸ்.பி.வெங்கிடுசாமி  , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினரும்,  சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து  மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471.

No comments:

Post a Comment