ஈரோடு மாவட்டம் கிருஷ்ணா பாளையத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் மக்கள் வெள்ளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரங்க முதல்வன் தலைமையில் கிருஷ்ணன் பாளையம் பகுதியில் கட்சி கொடியேற்றி மாபெரும் தாரை தப்பாட்டம் நடத்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே கேக் வெட்டி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு 24வது வார்டு செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார், ரஞ்சித் கட்சி கொடி ஏற்றி வைத்தார் ,36வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில் தப்பாட்ட த்தைதுவங்கி வைத்தார்,மாவட்ட துணை செயலாளர் கொடுமுடி பழனிச்சாமி இனிப்பு வழங்கினார், மற்றும் ஈரோடு முழுவதும் கிழக்குத் தொகுதி துணை செயலாளர் சதீஷ் கமல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். சிறப்பு நிகழ்வாக கருணாலய இல்லத்தில் 60 குழந்தைகளுக்கு காலை உணவு நில உரிமை மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் தலைமையில் வழங்கப்பட்டது.
மாவட்ட அமைப்பாளர் துரை பாலு வரவேற்புரையாற்றினார், ரஞ்சித் அரசாங்கம் உணவு வழங்கினார். மேலும் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஓவியத்தை சுவரில் பிரம்மாண்டமாக மதுரை ஓவியர் எழில் வரைந்தார், இறுதியாக பகுதி செயலாளர் விக்னேஷ், ஆதி வள்ளுவன் ,சதீஷ் ஆகியோர் நன்றியுரையாற்றினார்.

No comments:
Post a Comment