ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடப்பிரிவு வாரியாக முதல் இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் கலைமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் உதவி தலைமையாசிரியர் சசி கவிதா பானுமதி வரவேற்று பேசினார் விழாவில் சிறப்பு விருந்தினராக பெருந்துறை எம்எல்ஏ ஜேகே என்கிற ஜெயக்குமார் கலந்துகொண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 12 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பார்ட்டி பேசினார்.
இந்த விழாவில் பெற்றார் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெகதிஷ், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வைகை தம்பி (எ) ரஞ்சித் ராஜ், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்.
No comments:
Post a Comment